அடி தூள்…. ரஜினிக்கு வில்லனாகும் 80ஸ் சாக்லேட் பாய் : இனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்…!!

Author: Sudha
24 July 2024, 1:54 pm

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது.படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதில் இருந்தே எதிர்பார்ப்பும் பல மடங்கு எகிறி விட்டது. “கூலி” தலைப்பு ரசிகர்களுக்கு புதிதில்லை என்றாலும் லோகேஷ் கனகராஜ் – ரஜினி காம்பினேஷனில் சூப்பரா இருக்கு என்றனர் ரசிகர்கள்.

தினமும் கூலி திரைப்படம் குறித்து புதிது புதிதாக அப்டேட்ஸ் வந்து கொண்டே இருந்தது.கூலி டீமில் தினமும் நடிகர், நடிகைகள் இணைந்து கொண்டே இருந்தார்கள்.

ஆனாலும் சூப்பர் ஸ்டாருக்கு வில்லன் யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஹைப் உடன் காத்திருந்தனர்.தெலுங்கு திரை உலகத்தின் 80 s சாக்லேட் பாய் நாகார்ஜுனா தான் வில்லன் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இதயத்தை திருடாதே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தை திருடியவர் நடிகர் நாகார்ஜுனா.

இந்த அறிவிப்பைக் கேட்ட பிறகு ரசிகர்களின் பல்ஸ் தெரிந்தவர் லோகேஷ் கனகராஜ் என திரையுலகம் பேசிக் கொள்கிறது. ரஜினி மற்றும் நாகார்ஜுனா மோதிக் கொள்ளும் காட்சிகள் நிச்சயமாக கூஸ் பம்ப்ஸ் மொமெண்ட்ஸ் தான் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!