சூர்யா படத்தில் லோகேஷ் கனகராஜ்? வேற லெவல் காம்போவில் அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படம்!
Author: Prasad25 June 2025, 5:58 pm
ஹீரோவாக களமிறங்கும் லோகி
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து “கூலி” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ஸ்ருதிஹாசன், சௌபின், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

“கூலி” திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவருகின்றன. இத்திரைப்படம் அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படம் என்பதால் லோகேஷ் கனகராஜ் தாய்லாந்து சென்று மார்ஷியல் கலையை கற்று வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸே தயாரிக்கவுள்ளதாம்.
சூர்யா-லோகேஷ் கனகராஜ் காம்போ
இந்த நிலையில் தற்போது அதே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளிவருகிறது. அதாவது இத்திரைப்படத்தில் சூர்யாவும், லோகேஷ் கனகராஜ்ஜும் இணைந்து நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக “கைதி 2” திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படம் LCU-வுக்குள் உருவாகவுள்ள திரைப்படம் என்பதால் “விக்ரம்” படத்தில் இடம்பெற்ற சூர்யா ஏற்று நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் “கைதி 2” திரைப்படத்திலும் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.