விஜய் அரசியலுக்கு வருகிறாரா? எனக்கு தெரியாதே – நேக்கா பேசி நழுவிய லோகேஷ் கனகராஜ்!

Author: Shree
20 July 2023, 10:29 am
vijay
Quick Share

சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.

அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து மக்கள் சேவையில் இறங்கினர். அதே போல் அண்மையில் விஜய் 234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா நடத்தி அரசியல் என்ட்ரி குறித்து பேசி தமிழகம் முழுக்க கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் கோவையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சரவணம்பட்டி பகுதியில் உள்ள SNS தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜிடம், விஜய் அரசியலுக்கு வருகிறாரா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்த கேள்விக்கான பதிலை என்னிடம் கேட்பதே வேஸ்ட் . அரசியல் தெரிந்தவர்கள் சொன்னால் சரியாக இருக்கும். எனக்கு அரசியல் பத்தியெல்லாம் தெரியாது கூறிவிட்டார். இதனால் லோகேஷ் தன் படங்களுக்கு ரகசியங்களை காப்பது போன்றே நேக்கா பேசி எஸ்கேப் ஆகிவிட்டாரே என பலர் கூறி வருகிறார்கள்.

Views: - 299

0

0