வெற்றியை கொண்டாட சுற்றுலா சென்ற மாஸ்டர் ஃப்ரண்ட்ஸ்!

3 February 2021, 1:59 pm
Quick Share

மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது நண்பர்களுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

மாநகரம், கைதி ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13 ஆம் தேதி திரைக்கு வந்த மாஸ்டர் படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து அமோக வரவேற்பு வந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாஸ்டர் படம் நல்ல ஹிட் கொடுத்தது மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சஞ்சீவ், ஸ்ரீமன், ரம்யா சுப்பிரமணியன், பிரேம்குமார், நாசர், பூவையார், KPY தீனா, அர்ஜூன் தாஸ் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி உள்பட உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. திரையரங்கில் வெளியானதை தொடர்ந்து மாஸ்டர் படம் அமேசான் பிரைம் வீடியோவிலும் வெளியானது. இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத், மாஸ்டர் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜெகதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாஸ்டர் படம் வெளியாவதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ், அனிருத், அர்ஜூன் தாஸ், ரத்ன குமார் ஆகியோர் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0