கஞ்சா அடிக்காமல் உன்னால படமே எடுக்க முடியாதா? லோகேஷ்’ ஐ விளாசித்தள்ளும் பிரபலம்!

Author: Shree
23 June 2023, 11:28 am

வித்யாசமான படங்கள் எடுத்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுக்கும் இளைய தலைமுறை இயக்குனர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் லோகேஷ் கனகராஜ். கோவையை சேர்ந்த இவர் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கி பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்கிறார். ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இதில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியானது. இதில் விஜய் பாடல் முழுக்க வாயில் சிக்ரெட் பிடித்துக்கொண்டே நடனம் ஆடுகிறார். இதனால் லோகேஷ் கண்டும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். தம், குடி, கஞ்சா இது இல்லாமல் அவரால் படமே எடுக்க முடியாது? படத்திற்கு படம் கரி சோறு , குடி என காட்டி வருவது சமூக சீர்கேடாக இருக்கும் என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டியில் கூறியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!