லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்! 

Author: Prasad
2 May 2025, 6:53 pm

லோகி யுனிவர்ஸ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே தொடங்கியுள்ளார். எனினும் தற்போது LCU அல்லாத “கூலி” திரைப்படத்தை இயக்கியுள்ளார். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள இத்திரைப்படம் ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. 

lokesh kanagaraj introduce as a hero in upcoming film

“கூலி” திரைப்படத்தை தொடர்ந்து “கைதி 2”, “ரோலக்ஸ்” போன்ற LCU-க்குள் அடங்கும் திரைப்படங்களை இயக்கவுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் குறித்து ஒரு ஆச்சரிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. 

புதிய அவதாரம்

அதாவது லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம். அத்திரைப்படத்தை தமிழின் ஒரு முன்னணி இயக்குனர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு லோகேஷ் நடிக்க அன்பறிவ் இயக்குவதாக ஒரு புராஜெக்ட் தயாரானது. ஆனால் சில காரணங்களால் அது டிராப் ஆனது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ஒரு புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

lokesh kanagaraj introduce as a hero in upcoming film

பல இயக்குனர்கள் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுவது என்பது கோலிவுட்டில் வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கும் நிலையில் “இவருக்கும் அந்த விபரீத ஆசை வந்துடுச்சா?” என சிலர் விமர்சித்து வருகின்றனர்.  

  • assistant director told that aan paavam pollathathu movie script is mine கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய ரியோ பட இயக்குனர்! டிரைலரோடு புகாரும் சேர்ந்து வெளிய வருதே?
  • Leave a Reply