சர்ப்ரைஸுக்கு மேல் சர்ப்ரைஸ்! ஜனநாயகன் படத்தில் இணைந்த மூன்று இயக்குனர்கள்! வேற லெவல்…
Author: Prasad23 August 2025, 7:03 pm
விஜய்யின் கடைசி திரைப்படம்
2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்நோக்கி நடைபோட்டுக்கொண்டிருக்கும் தவெக தலைவர் விஜய்யின் கடைசி திரைப்படம்தான் “ஜனநாயகன்”. இத்திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் மமிதா பைஜு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

ஜனநாயகனில் இணைந்த மூன்று டாப் இயக்குனர்கள்
“ஜனநாயகன்” திரைப்படத்தில் மூன்று டாப் இயக்குனர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யின் நட்பு வட்டாரத்தில் இருக்கும் அட்லீ, நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் “ஜனநாயகன்” திரைப்படத்தில் பத்திரிக்கையாளர்களாக நடித்துள்ளார்களாம். இவ்வாறு ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு “ஜனநாயகன்” படத்தில் புஸ்ஸி ஆனந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோர் “ஜனநாயகன்” படத்தில் நடித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
