கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு பரிசளிக்க திட்டமிட்ட லோகேஷ் கனகராஜ்

2 November 2020, 4:18 pm
Quick Share

மாநகரம் மற்றும் கைதி ஆகிய வெற்றிப்படங்களில் மூலமாக யார் இந்த இயக்குனர் என கேட்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது தளபதி விஜய்யை வைத்து அவர் இயக்கியுள்ள திரைப்படமான மாஸ்டர் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் 232வது திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார். நவம்பர் ஏழாம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார் அவருக்கு பரிசாக திரைப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கினை லோகேஷ் கனகராஜ் அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Views: - 16

0

0