SK19 க்கு இப்படியொரு டைட்டில் வச்சு மாஸ் காட்டிய லைகா!

27 January 2021, 12:20 pm
SK DON - Updatenews360
Quick Share

சிவகார்த்திகேயன் நடிக்கும் SK19 படத்தின் தலைப்பு குறித்து லைகா நிறுவனம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அனைவரிடத்திலும் நம்ம வீட்டுப்பிள்ளையாக திகழ்கிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படம் வெளியானது. ஆனால், இந்தப் படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. இதனால், அடுத்தடுத்து படங்களில் அதிக கவனமுடன் நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் அயலான், டாக்டர் ஆகிய படங்கள் உருவாகி வந்தது.

இந்த நிலையில், இந்த இரு படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் எஸ்கே19 படம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பேச்சுலர் ஆப் எண்டர்டெயின்மெண்ட் சிவகார்த்திகேயன் டான் என்றும், இசை அனிருத் என்றும், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்றும் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எனது அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியிடுவதில் மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு டான் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இசை எனது நெருங்கிய ராக்ஸ்டார் அனிருத், அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் சேர்வது என்பது கூடுதல் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

எஸ்கே19 படம் முழுக்க முழுக்க கல்லூரி கதையை மையப்படுத்தி உருவாக இருப்பதாகவும், இதில், சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக, அதுவும், இன்ஜினியரிங் அல்லது எம்பிஏ மாணவராக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இவருடன் இணைந்து குக் வித் கோமாளி புகழ்,பாலா, ஷிவாங்கி நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பால சரவணன், காளி வெங்கட், ரக்‌ஷன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், சிவகார்த்திகேயனின் விக்கிப்பீடியா பக்கத்தில் உடனடியாக டான் படம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் படம் முடிக்கப்பட்டுள்ளது என்று அந்தப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில், டான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0