சிம்பு பாடிய யாரையும் இவ்ளோ அழகா பாக்கல: சுல்தான் 2ஆவது சிங்கிள் டிராக் வெளியீடு!

5 March 2021, 9:28 pm
Quick Share

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் யாரையும் இவ்ளோ அழகா பாக்கல என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இது ராஷ்மிகா மந்தனாவின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கார்த்திக்கு மனைவியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
சுல்தான் படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2020 ஆம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, 2020 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி தற்போது முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவிகிதத்திற்கும் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு படமும் திரையரங்கை நோக்கி படையெடுக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தன. கடந்த 28 ஆம் தேதி சிபிராஜ் நடித்த கபடதாரி படம் திரைக்கு வந்தது.

தனுஷின் ஜகமே தந்திரம் படமும் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டீசர் ஏற்கனவே வெள்கியாகியுள்ளது. இந்த நிலையில், தற்போது சுல்தான் பட த்தின் 2ஆவது சிங்கிள் டிராக் யாரையும் இவ்ளோ அழகா பாக்கல என்று தொடங்கும் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இந்தப் பாடல் அவருக்கே பாடியதாக தெரிகிறது. விவேகா இந்தப் பாடலுக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி சுல்தான் படம் திரைக்கு வரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் திரையரங்கில் வெளியிடப்படும் என்றும், பிறகு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுல்தான் பட த்தில் கார்த்தியுடன் இணைந்து நெப்போலியன், லால், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, நவாப் ஷா, ராமசந்திர ராஜூ ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

சுல்தான் 2ஆவது சிங்கிள் டிராக் பாடல் வரிகள் இதோ…
யாரையும் இவ்ளோ அழகா பாக்கல…
உன்னப்போல் எவரும் உசுர தாக்கல…
காதுல வேற எதுவும் கேக்கல…
காலிதான் ஆனேன் போற போக்குல…
கோணலா பாக்குறா…
கோவமா பேசுறா…
சேனல மாத்துறா..
என் மனச…
முதல் முறை பாத்தேன்…
தலைகீழ் ஆனேன்
மருமுறை பார்த்தேன்…
ஐயயோ…
பலமுறை பாத்தா
பையத்தியம் ஆவேனே என்று அந்த பாடல் வரிகள் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படத்தைத் தவிர, இதுவரை திரைக்கு வந்த படங்கள் எதுவும் அப்படி ஒன்றும் ஹிட் கொடுக்கவில்லை என்பதால், சுல்தான் பட த்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக டாக்டர் படம் வெளியாக இருக்கிறது.

Views: - 1

12

0