FaFa பாடல் மூலம் கம்பேக் கொடுத்தாரா யுவன்? ரசிகர்கள் என்ன பேசிக்கிறாங்க!
Author: Prasad9 July 2025, 4:58 pm
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் இசையமைப்பாளர்
90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளராக வலம் வருபவர்தான் யுவன் ஷங்கர் ராஜா. எனினும் அவர் பழைய ஃபார்மில் இல்லை என பலரும் விமர்சனம் வைப்பது உண்டு. கடந்த 2024 ஆம் ஆண்டு வெளிவந்த விஜய்யின் “GOAT” திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி அமைந்திருந்தன. ஆனால் அதனை தொடர்ந்து வெளிவந்த படங்களில் அவர் இசையமைத்த பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கும்படி இல்லை. இந்த நிலையில் ஃபகத் ஃபாசிலின் “மாரீசன்” திரைப்படத்தில் யுவன் இசையமைத்துள்ள பாடல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
FaFa பாடல்!
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரி தயாரிப்பில் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “மாரீசன்”. இதில் ஃபகத் ஃபாசில், வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். “மாமன்னன்” திரைப்படத்தை தொடர்ந்து இத்திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வருகிற ஜூலை 25 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “FaFa” என்ற பாடல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பாடலை மதன் கார்கி எழுதியுள்ளார். மாட்சியம் பாலா என்பவர் இப்பாடலை பாடியுள்ளார்.
இப்பாடலை கேட்ட ரசிகர்கள், “வெகு நாட்கள் கழித்து யுவனின் அருமையான பாடல்”, “யுவனின் பாடல் கேட்பதற்கு சிறப்பாக இருக்கிறது” என கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக இத்திரைப்படம் யுவனுக்கு ஒரு கம்பேக் ஆக இருக்கும் எனவும் கூறி வருகின்றனர். அப்பாடல் இதோ…