ஆகாச வீரனுடன் போட்டி போட்டு மண்ணை கவ்விய மாரீசன்? கடைசில இப்படி ஆகிடுச்சே?
Author: Prasad29 July 2025, 3:49 pm
தலைவன் தலைவி VS மாரீசன்
விஜய் சேதுபதி-நித்யா மேனன் நடித்த “தலைவன் தலைவி” திரைப்படமும் ஃபகத் ஃபாசில்-வடிவேலு நடித்த “மாரீசன்” திரைப்படமும் கடந்த ஜூலை 25 ஆம் தேதி ஒரே நாளில் மோதியது. இதில் “மாரீசன்” திரைப்படத்திற்கு ஓரளவுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால் அதே வேளையில் “தலைவன் தலைவி” திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்தது. ரசிகர்களை கவர்ந்த ஒரு நகைச்சுவை கலந்த குடும்ப திரைப்படமாக இது அமைந்தது. இந்த நிலையில் “மாரீசன்” திரைப்படத்தின் வசூல் குறித்தான ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மண்ணை கவ்விய மாரீசன்
“மாரீசன்” திரைப்படம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி வெளியான நிலையில் கடந்த 4 நாட்களில் ரூ.3.89 கோடிகளையே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் “தலைவன் தலைவி” திரைப்படம் கடந்த 4 நாட்களில் ரூ.25.75 கோடிகள் வசூல் செய்துள்ளதாம். இதன் மூலம் “மாரீசன்” வசூல் நிலவரம் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது தெரிய வருகிறது.
