நடிகர் 100 நடிகை 60 கிலோ எடையை சுமந்தனர்; இயக்குனர் பெருமிதம்

Author: Sudha
19 July 2024, 2:53 pm

பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அடுத்து கலையரசன் திவ்யா துரைசாமி நடிப்பில் வாழை திரைப்படத்தை இயக்குகிறார்.வாழை’ திரைப்படம் பற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் சொல்லும் போது வாழை என் மனதை அழுத்திக் கொண்டிருந்த ஒரு உண்மைக்கதை நான் உருவாக்கும் எல்லா கதாபாத்திரங்களும் என் வாழ்க்கையில் நான் பார்த்தது. அவர்கள் இன்னும் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே எனக்குள் பதட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

வாழை படத்தில் இடம்பெற்றுள்ள ‘பாதகத்தி’ பாடல் தன்னை தொந்தரவு செய்துகொண்டேயிருப்பதாகவும் சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் மிகவும் பிடித்துள்ளது எனவும் குறிப்பிட்டார். நான் பட்ட கஷ்டங்களை நீங்கள்பட வேண்டும் என்று கூறி நடிகர்களிடம் வேலை வாங்கினேன். நடிகர் கலையரசன் தன் தலையில் 100 கிலோ எடையை சுமந்ததாகவும் திவ்யா துரைசாமி 60 கிலோ எடையை தூக்கினார் எனவும் நடிகர்கள் கதாப்பத்திரமாகவே மாறி கடுமையான உழைத்தனர் அவர்களை பார்க்கவே பாவமாக இருந்தது, நிறைய வேலை வாங்கியிருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

மொத்த படக்குழுவுக்கும் நன்றி. என் வாழ்வில் நடந்த ஆகப்பெரும் துயரத்தை நான் படமாக்கி இருக்கிறேன் அதை என் மனைவி திவ்யா தயாரிப்பார் என நான் நினைத்துப் பார்த்து கூட கிடையாது. பிரமிப்பாக இருக்கிறது. என் வாழ்க்கையில் மீளமுடியாத துயரம் ‘வாழை’.

என்னைப்பற்றி நிறைய கேள்விகள் உங்களிடம் இருக்கும். என்னை நீங்கள் புரிந்துகொள்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட படம் இது” என்றும் மாரி செல்வராஜ் சொல்லியுள்ளார்.

  • Bigg Boss பிக் பாஸ் பிரபலத்துக்கு வந்த ஆபாச வீடியோக்கள்… மர்மநபரின் போட்டோவை வெளியிட்டு புகார்!
  • Views: - 124

    0

    0