கிசுகிசுக்களை உண்மையாக்கிய மாதம்பட்டியார்? இரண்டாவது திருமணம் செய்து ஸ்தம்பிக்க வைத்த சம்பவம்!
Author: Prasad28 July 2025, 10:38 am
மாதம்பட்டியார் குறித்து கிசுகிசு…
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் 2019 ஆம் ஆண்டு “மெகந்தி சர்க்கஸ்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் தற்போது நடுவராக வலம் வருகிறார். மிகவும் பிரபலமான சமையல் கலைஞரான இவருக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இதனிடையேதான் இவரும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பின.

ஆனால் இது குறித்து இவர்கள் இருவரும் எந்த விளக்கமோ அல்லது மறுப்போ கூட தெரிவிக்கவில்லை. ஸ்ருதியை விட்டு பிரிந்து ஜாய் கிரிஸில்டாவை விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகின.
கிசுகிசுக்களை உண்மையாக்கிய மாதம்பட்டியார்

இந்த நிலையில் இந்த கிசுகிசுக்களை உண்மையாக்கியுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். அதாவது நேற்று ஒரு கோயிலில் மாதம்பட்டி ரங்கராஜும் ஜாய் கிரிஸில்டாவும் திருமணம் செய்துகொண்டனர். இப்புகைப்படங்களை ஜாய் கிரிஸில்டா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் ஜாய் கிரிஸ்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு வியப்பையும் அதே நேரத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
