முதல் மனைவியுடன் புகைப்படம்; குழந்தைக்கு பெயர் வைத்த இரண்டாம் மனைவி? டிரெண்டிங்கில் மாதம்பட்டியார்
Author: Prasad14 August 2025, 6:51 pm
இரண்டாவது திருமணம்
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா என்ற பிரபல ஆடை வடிவமைப்பாளரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். மேலும் ஜாய் கிரிஸில்டா தான் 6 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் முதல் மனைவியின் பெயர் ஸ்ருதி. இவர் ஒரு வழக்கறிஞர். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில்தான் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இதனிடையே ஸ்ருதியை முறையாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவரது முதல் மனைவியான ஸ்ருதி தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறினார்.
முதல் மனையுடன் புகைப்படம்
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இருவரும் இணைந்து அவ்விழாவில் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியது.

குழந்தைக்கு பெயர் வைத்த இரண்டாவது மனைவி
இதனை தொடர்ந்து ஜாய் கிரிஸில்டா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார். அதாவது தனது குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என பெயர் வைத்துள்ளார்.
Hospital visits be like ❤️
— Joy Crizildaa (@joy_stylist) August 13, 2025
Raha Rangaraj #madhampattyrangaraj #ourlittlebundleofhappiness #parentstobe #PregnancyJourney #baby2025 pic.twitter.com/mE524TQjRq
இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வாறு முதல் மனைவியுடன் புகைப்படம், இரண்டாவது மனைவியின் குழந்தைக்கு பெயர் வைத்தல் என மாதம்பட்டி ரங்கராஜ் இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறார்.
