ஏய் பொண்டாட்டி… இப்ப தான் குளிச்சு, டிரஸ் மாத்துனேன்.. மாதம்பட்டி ரங்கராஜின் வீடியோ வைரல்!
Author: Udayachandran RadhaKrishnan1 September 2025, 11:02 am
மெகந்தி சர்க்கஸ் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் பிரபல சமையல் கலைஞராகவும் உள்ளார். மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
பிரபலங்கள் வீட்டில் விசேஷம் என்றாலே, மாதம்பட்டியாரின் சமையல்தான், அந்தளவுக்கு இவர் சமையல் சுவையாக இருக்கும். இப்படி மெல்ல மெல்ல திரைத்துறையினர் மத்தியில் பிரபலமான மாதம்பட்டி பின்னர் ஒரு சில படங்களில் நடித்தார்.
அதன் பின்னர் அவருக்கு பிரபல தொலைக்காட்சியில் நடுவராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. சமையல் தொடர்பான நிகழ்ச்சி என்பதால் மாதம்பட்டியாரும் நடுவராக பங்கேற்றார்.
இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ், இரண்டாவது திருமணம் செய்ததாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் இருந்த பெண் ஜாய் கிரிசில்டா, இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்.
திரைத்துறையில் ஜாய் கிரிசில்டா, பிரபலமானவர். காஸ்ட்யூம் டிசைனராக பல படங்களில் பணியாற்றியுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜின் அந்த சமையல் நிகழ்ச்சிக்கும், இவர் தான் காஸ்ட்யூம் டிசைனர் என கூறப்படுவதும் உண்டு.
இந்த நிலையில் இருவரின் திருமண போட்டோ வைரலாகியுதை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டா தான் கர்ப்பமாக இருப்பதாக அவ்வப்போது தனது எக்ஸ் தளத்தில் போட்டோவும் வெளியிட்டார்.
ஆனால் இது குறித்து மாதம்பட்டியார் தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. ஆனால் சமீபத்தில சென்னை காவல் ஆணையரிடம், ஜாய் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.
தான் 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், என் குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான், என்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டார் என அடுக்கடுக்கான புகாரை கூறினார்.
Husband (aka) #RahaRangaraj Appa-வின் Alaparaigal 🙈 @MadhampattyRR #madhampattyrangaraj #chefmadhampatty #chefmadhampattyrangaraj
— Joy Crizildaa (@joy_stylist) August 31, 2025
A man that can betray the woman who carried his child will betray anyone
Read that again…. pic.twitter.com/0mItPCB9Uc
இது குறித்தும் மாதம்பட்டி ரங்கராஜ் எந்த பதிலும் சொல்லாத நிலையில், ஜாய் கிரிசில்டா நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடன் பேசிய வீடியோ ஒன்றை போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். அதில், ஏய் பொண்டாட்டி, ஐ லவ்யூ.. இப்பதான் குளிச்சேன்.. என அந்த வீடியேவில் அவர் பேசியுள்ளார்.
