பல வருஷமா நாங்க கணவன்-மனைவிதான்! திடீரென அதிர்ச்சியை கிளப்பிய ஜாய் கிரிஸில்டா? 

Author: Prasad
31 July 2025, 11:39 am

இரண்டாவது திருமணம்

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது முதல் மனைவியான ஸ்ருதியை அவர் முறையாக விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஜாய் கிரிஸில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வாறு மாதம்பட்டி ரங்கராஜ் பல அதிர்ச்சிகளை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.

Madhampatty rangaraj wife joy crizildaa instagram post about her marriage going viral

பல வருடங்களாக நாங்கள் கணவன்-மனைவி?

இந்த நிலையில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அதில், “இது தெளிவுப்படுத்த மட்டுமே! சில பயணம் அமைதியாக தொடங்குகிறது. ஆனால் சில வருடங்களுக்கு  முன்பு அன்புடனும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும்  கணவன் மனைவியாக நாங்கள் தொடங்கிய பயணம் போல் நம்பிக்கையுடன் அது வளர்கிறது. இந்த ஆண்டு ஆழமான காதலோடு நாங்கள் எங்கள் குழந்தையை வரவேற்க தயாராக இருக்கிறோம்” என கூறியுள்ளார். ஜாய் கிரிஸில்டாவின் இப்பதிவு வைரல் ஆகி வருகிறது. 

Madhampatty rangaraj wife joy crizildaa instagram post about her marriage going viral

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!