‘விசில் போடு’ பாடல் நிறைய பேருக்கு புடிக்கல.. ட்ரோல்களுக்கு மதன் கார்க்கி கொடுத்த பதிலடி..!

Author: Vignesh
17 April 2024, 7:15 pm
Vijay - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

மேலும் படிக்க: சார் விட்டுருங்கன்னு சொன்னால்.. புலம்பித்தள்ளிய முத்தழகு சீரியல் நடிகை..!

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்பதை தெரியப்படுத்தினர். இப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.

Goat vijay

மேலும் படிக்க: கோபிகாவா இது? எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிட்டாரே..!

இதில், அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கவுள்ளதாக முன்னர் வெளியான செய்திகள் கூறியது. இதில் லைலா இருப்பதால் ஒருவேளை அப்பா விஜய்க்கு ஜோடியாக லைலா நடிக்கிறாரோ? அப்போ சினேகா எந்த ரோலில் நடிக்கிறார் என குழப்பங்கள் ஏற்பட்டது.

இதனிடையே, நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு என சில தினங்களுக்கு முன்பு வெளியானது. யுவன் இசையில் விஜய் இந்த பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. விஜய் ரசிகர்களே பாடலை விமர்சித்து வந்தனர். இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவின் முந்தைய பாடல்களை ஒப்பிட்டு விசில் போடு பாடலை நெட்டிசன் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த பாடலை எழுதிய மதன் கார்க்கி அளித்த பேட்டியில், விமர்சனங்களுக்கு பதில் அளித்து இருக்கிறார். அதாவது, செல்பி ஃபுல்ல, கூகுள் கூகுள் பாடலுக்கு கூட இப்படித்தான் ஆரம்பத்தில் கலவையான ரெஸ்பான்ஸ் கிடைத்தது என்றும், தற்போது மக்கள் பாடலை ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல இந்த பாடலுக்கும் நடக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 64

0

0

Leave a Reply