எந்த பக்கம் திரும்புனாலும் இவர் நிற்கிறாரே? சாய் அப்யங்கர் சார், நீங்க இங்கயும் வந்துட்டீங்களா?
Author: Prasad30 July 2025, 10:53 am
சென்சேஷனல் இசையமைப்பாளர்
தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இசையமைப்பாளராக தற்போது வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர”, “ஆச கூட” போன்ற ஆல்பம் பாடல்களின் மூலம் கவனம் பெற்ற சாய் அப்யங்கர், தற்போது 8 திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் இசையமைத்த ஒரு படம் கூட வெளிவரவில்லை என்றாலும் வரிசையாக பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளதுதான் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
“கருப்பு”, “STR 49”, “பல்டி”, “Dude”, “Benz”, “AA22xA6”, “SK 24”, “மார்ஷல்” போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் சாய் அப்யங்கர். இவர் அனிருத்திற்கு போட்டியாக களமிறங்கியுள்ளார் என்று பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில் தற்போது அனிருத்தின் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

நீங்க இங்கயும் வந்துட்டீங்களா?
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள “மதராஸி” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்தான ஒரு சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த கலகலப்பான வீடியோவில் சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ், அனிருத், பாடலாசிரியர் சூப்பர் சுப்பு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “Salambala” வருகிற ஜூலை 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்பாடலை சாய் அப்யங்கர் பாடியுள்ளார். சமீப நாட்களாக எந்த முன்னணி நடிகர் நடித்த திரைப்படங்களின் அறிவிப்பு வெளிவந்தாலும் அதில் சாய் அப்யங்கர் இசை என்று டைட்டில் வந்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது “மதராஸி” முதல் சிங்கிள் பாடலை அவர் பாடியுள்ளார் என்ற அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் பலரும், “சாய் அப்யங்கர் சார், நீங்க இங்கயும் வந்துட்டீங்களா?” என்று கம்மண்ட் செய்து வருகின்றனர்.
“மதராஸி” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். அனிருத் இச்சையமைத்துள்ள இத்திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
