அந்த படம் அப்போது வந்திருந்தால் ஹிட் அடித்திருக்கும்?- விடாமுயற்சி குறித்து ஓபனாக பேசிய மகிழ் திருமேனி

Author: Prasad
28 June 2025, 4:24 pm

தோல்வியை தழுவிய விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதன் காரணமாக அத்திரைப்படத்திற்கு மிகவும் மோசமான விமர்சனங்கள் வந்தன. குறிப்பாக அஜித் ரசிகர்கள் விரும்பும் மாஸ் ஆன காட்சிகள் எதுவும் படத்தில் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்திற்குள்ளாகினர். 

இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் ரூ.350 கோடி பொருட்செலவில் தயாரித்திருந்தது. ஆனால் இத்திரைப்படம் ரூ.250 கோடியே வசூல் செய்தது.  இதனால் ரூ.100 கோடிக்கு மேல் லைகா நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. 

magizh thirumeni open talk about vidaamuyarchi movie

அப்போ வந்திருந்தால் ஹிட் அடித்திருக்குமா?

2012 ஆம் ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய்  நடிப்பில் ஹிட் அடித்த “தடையற தாக்க” திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மறுவெளியீடு கண்டுள்ள “தடையற தாக்க” திரைப்படத்தை மகிழ் திருமேனி, அருண் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை கமலா தியேட்டரில் ரசிகர்களோடு கண்டுகழித்தனர். 

படத்தை பார்த்து முடித்துவிட்டு வெளியே வந்த மகிழ் திருமேனியும் அருண் விஜய்யும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது மகிழ் திருமேனி “எஸ்.பி.ஜனநாதன் என்னிடம் கூறிய வார்த்தை எனக்கு இன்றும் மனதிற்குள் பதிந்திருக்கிறது. இந்த படத்தை திரையரங்கத்தில் பார்த்தவர்கள் போக இணையத்தளத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கையை நாம் கணக்கில் எடுத்தோமானால் அவர்கள் அத்தனை பேரும் திரையரங்கத்திற்கு வந்திருந்தால் அந்த ஆண்டின் மிகப் பெரிய பிளாக் பஸ்டராக தடையற தாக்க திரைப்படம் இருந்திருக்கும் என்று என்னிடம் சொன்னார்” என கூறினார். இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தை குறித்தும் அருண் விஜய் குறித்தும் பல விஷயங்களை பேசினார்.

magizh thirumeni open talk about vidaamuyarchi movie

அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், “13 வருடங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருந்தால் இன்னும் பெரிய வெற்றியை பெற்றிருக்கும் என கூறினீர்கள். நீங்கள் அஜித் குமார் சாரை வைத்து இயக்கிய திரைப்படமும் 13 வருடங்கள் கழித்து வெளியானால் இன்னும் மிகப்பெரிய அங்கீகாரம் இருக்குமா?” என்று கேட்டார்.

அதற்கு மகிழ் திருமேனி, “ஒரு படம் வெற்றிப்படமா இல்லையா என்பதை தீர்மானிக்க கூடிய அதிகாரம் ரசிகர்களின் கைகளில் இருக்கிறது. ஆனால்  ஒரு திரைப்படம் நல்ல திரைப்படமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் காலத்தின் கைகளில் இருக்கிறது. காலத்தை வென்று நின்ற ஒரு திரைப்படமாக தடையற தாக்க இருக்கிறது” என பதிலளித்தார். எனினும் அவரது பதில் நேரடியாக இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!
  • Leave a Reply