40 கோடி செலவில் எடுக்கப்பட்ட அனிமேஷன் படம்? 300 கோடி கல்லா கட்டி சாதனை? அடேங்கப்பா…

Author: Prasad
30 August 2025, 4:08 pm

மகாவதார் நரசிம்மா

“கேஜிஎஃப்”, “காந்தாரா” போன்ற திரைப்படங்களை தயாரித்த ஹொம்பாலே நிறுவனம் “மகாவதார்” என்ற பெயரில் விஷ்ணுவின் 10 அவதாரங்களை வைத்து பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அதில் முதல் பாகமான “மகாவதார் நரசிம்மா” திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு அனிமேஷன் திரைப்படமாகும். நரசிம்ம அவதாரத்தை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

Mahavatar narasimha movie world wide collection report

இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக வட இந்தியாவில் மக்கள் பலரும் பக்தி உணர்வோடு இத்திரைப்படத்தை திரையரங்குகளில் கண்டுகளித்தனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வசூல் குறித்தான ஒரு தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூரவமாக வெளியிட்டுள்ளனர். 

300 கோடி வசூல்!

அதாவது “மகாவதார் நரசிம்மா” திரைப்படம் உலகளவில் ரூ.300 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இத்திரைப்படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் வெளியான ஒரு மாத காலத்திற்குள் ரூ.300 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!