மகேந்திரனுக்கு விஜய் சேதுபதி வாய்ஸா? பாஸ் செட்டே ஆகல?

14 January 2021, 6:05 pm
Quick Share

சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்துள்ள மகேந்திரனுக்கு விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்துள்ளது அப்படி ஒன்றும் சரியாக இல்லை என்று பலரும் விமர்சித்துள்ளனர்.

விஜய் நடித்த மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியானது. கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பிறகு திரைக்கு வந்துள்ளதால், ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் ஓபனிங் சீனே விஜய் சேதுபதிக்குரிய காட்சி தான். அதாவது விஜய் சேதுபதி சிறுவயதாக இருக்கும் போது சீர்திருத்த பள்ளியில் இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில், அங்கிருந்து தப்பித்து வரும் விஜய் சேதுபதி, அவரை டார்ச்சர் செய்யச் சொன்னவரிடம் சென்று, தன்னை ஒரு வாரம் விடுமாறும், அந்த ஒரு வாரத்தில் தான் சம்பாதிக்கும் பணத்தில் பாதி கொண்டு வந்து தருவதாகவும் விஜய் சேதுபதியாக நடித்த மகேந்திரன் கூறுகிறார். அப்படி ஒரு வாரத்திற்குப் பிறகு சோன்ன்படி பணம் கொடுக்கிறார். தொடர்ந்து, இது போன்று பணம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் வளர்ந்து பெரிய ரௌடியான பிறகு தனக்கு சீர்திருத்த பள்ளியில் வைத்து டார்ச்சர் பண்ணச் சொன்னவரை கொலை செய்கிறார். இது தான் விஜய் சேதுபதியின் என்ட்ரி சீனாக படத்தில் காட்டப்படுகிறது. ஆம், லாரியிலிருந்து இறங்கி கையில் பண மூட்டையுடன் வருகிறார். இது தான் அவரது மாஸ் ஓபனிங் என்ட்ரி. ஆனால், அதுவரையில், சிறையில், சித்ரவதை அனுபவித்து வந்தவர் நடிகர் மகேந்திரன். மகேந்திரனுக்கு விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.

சிறு வயதிலிருந்தே விஜய் சேதுபதி எவ்வளவு டார்ச்சர், கொடுமை, சித்ரவதையெல்லாம் அனுபவித்துள்ளார் என்பதை காட்டுவதற்காக மகேந்திரனுக்கு விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் அப்படி செய்தார்கள்? மகேந்திரனுக்கு விஜய் சேதுபதி வாய்ஸ் செட்டே ஆகவில்லை என்று பலரும் விமர்சித்துள்ளனர்.
ஒரு ரசிகனாக எங்களாலேயே அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விஜய் சேதுபதி எப்படி அந்த வாய்ஸ் கொடுப்பதற்கு சம்பதம் தெரிவித்தார் என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மகேந்திரனவே டப்பிங் கொடுக்கச் சொல்லியிருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்து.

Views: - 7

0

0