தன் நடிப்பை கலாய்த்த பிரபல தமிழ் நடிகர்… தக்க பதிலடி கொடுத்த மகேஷ் பாபு?

Author:
14 August 2024, 11:33 am

தெலுங்கு சினிமாவில் நட்சத்திர ஸ்டார் ஹீரோவாக இருந்து வருபவர் தான் நடிகர் மகேஷ்பாபு. அங்கு அவருக்கு பெண் ரசிகைகள் கூட்டம் மிக அதிகம் என்று சொல்லலாம். இவர் நீடா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு பயணத்தை துவங்கி தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஸ்டார் ஹீரோவாக நடித்து இன்று நட்சத்திர அந்தஸ்தில் இருக்கிறார்.

தெலுங்கில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் மகேஷ் பாபு இந்திய சினிமா அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அங்குள்ள ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் இவர் இதுவரை 9 நந்தி விருதுகள், 5 ஃபிலிம் பேர் விருதுகள், மூன்று சைமா விருதுகள் இப்படி பல பாராட்டுகளை பெற்று பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். நடிகர் என்பதையும் தாண்டி ஜீ. மகேஷ் பாபு என்டர்டைன்மென்ட் நிறுவனம் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இதனிடையே மகேஷ்பாபு எக்ஸ்பிரஷன் கொடுக்காத ஒரு நடிகர் நடிப்பு தெரியாத ஒரு நடிகர் என பல பரவலாக அவரை. கோலிவுட் சினிமாவும் கோலிவுட் சினிமா ரசிகர்களும் தாக்கி பேசுவது வழக்கமாக இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் கூட நடிகர் விக்ரம் பேட்டி ஒன்றில் ஜெயம்ரவி என்னிடம்…. நான் ஒரு முறை பிளைட்டில் சென்று கொண்டிருந்தபோது ஜெயம்ரவி என்னிடம் ஒரு படத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

mahesh-babu-updatenews360

அப்போது அந்த குறிப்பிட்ட நடிகர் அம்மா சேர்த்தாலும் அதே எக்ஸ்பிரஷன்ஸ்…. ஒரு நடிகை இடம் ப்ரொபோஸ் பண்ணாலும் அதே எக்ஸ்பிரஷன்ஸ்…. ஊரைவிட்டு ஓடிப்போனாலும் அதே எக்ஸ்பிரஷன்ஸ் யாரையாவது கொலை பண்ணாலும் அதே எக்ஸ்பிரஷன்… எல்லாத்துக்கும் ஒரே எக்ஸ்பிஷன் கொடுக்கிறாரு அது எப்படி ?அவரை எப்படி மக்கள் கொண்டாடுறாங்க சார் அப்படின்னு கேட்டாரு.

உடனே நான்…. அவர் எனக்கு ரொம்ப நல்லா தெரியும் அவர் என்னோட பிரண்டு பா என்று சொல்லியும் கூட அதான் எப்படிங்க….? என்று கேட்டார் என்று கூறினார். ஜெயம் ரவி மகேஷ் பாபுவை தான் கலாய்த்தார் என பலரும் ரசிகர்கள் ட்ரோல் செய்ய தொடங்கினார்கள்.

இந்த நிலையில் இது போன்ற விமர்சனங்களுக்கு தற்போது நடிகர் மகேஷ் பாபு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது…. எனக்கு பிற மொழிகளில் இருந்து வாய்ப்புகள் கிடைத்தாலும் நான் தெலுங்கு சினிமாவை தவிர மற்ற மொழி படங்களில் எப்போதும் நடிக்கவே மாட்டேன்.

டோலிவுட்டை தவிர எந்த திரைப்படத்துறைக்கும் நான் போக மாட்டேன். தெலுங்கு சினிமா ரசிகர்களால் எனக்கு கிடைக்கும் வெற்றியும் பாராட்டுக்களுமே போதும் என கூறி இருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஜெயம் ரவி போன்று பல பேர் மகேஷ் பாபுவை விமர்சித்ததால் தான் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக கூறி வருகிறார்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?