அந்த மூன்று நாட்கள் மிகவும் கஷ்டப்பட்டேன்.. மஹிமா நம்பியார் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Author: Rajesh
2 February 2022, 3:53 pm
Quick Share

நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.

தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் மஹிமா நம்பியார். அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை டாக் படத்திலும் விஜய் ஆண்டனி நடிக்கும் ரத்தம் படத்திலும் மஹிமா நம்பியார் நடிக்கிறார்.

இதனிடையே, கடந்த 9 நாட்களுக்கு முன்பு, தான் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்த அவர் தற்போது அதிலிருந்து மீண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். முதல் மூன்று நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது என தெரிவித்த அவர், தற்போது நடந்த பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். கடவுள், எனது டாக்டர்கள், குடும்பம் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

Views: - 886

0

0