“12- வயதில் இருந்து என்னை கருப்பு என்று சொல்லி அசிங்கப்படுத்துனாங்க..” – பிரபல ஹீரோவின் மகள் Open Talk !

30 September 2020, 12:12 pm
Quick Share

பாலிவுட் சினிமாவின் பாட்ஷா என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவரும் அடிமட்டத்திலிருந்து உழைப்பால் முன்னேறி இன்று நம்பர் ஒன் நாயகராக உள்ளார். ஐபிஎல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருந்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை. இந்தி திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தாலும் ரஜினிகாந்த் போல உலக அளவிலான மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதே ஷாரூக்கானின் எண்ணமாக இருந்து வருகிறது. சென்னை எக்ஸ்பிரஸ், ரா1 போன்ற படங்களிலும் கூட ரஜினி குறித்த ரெஃபரன்ஸ் காட்சிகளை வைத்திருப்பார்.

இந்நிலையில் இந்தி நடிகர் ஷாரூக்கானை வைத்து அட்லீ இயக்க இருக்கும் படம் Covid ஒழிந்தவுடன் ஷாரூக் கான் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் உலா வருகின்றன.

இந்தநிலையில், ஷாருக்கான் மகள் சுஹானா கான் தற்போது மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். தனது கருப்பு நிறத்தை சுட்டிகாட்டி வந்த பல கமன்ட்ஸ்களை பகிர்ந்துள்ள அவர், ”எனது 12 வயதில் இருந்தே, இந்த நிறத்துக்காக என்னை கிண்டல் செய்து வருகின்றனர். பலர் என்னை அசிங்கமாக இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள். வெள்ளையாகவும், நல்ல உயரத்தில் இருப்பவர்கள் மட்டுமே அழகு கிடையாது. எனது நிறத்துக்காக நான் சந்தோஷப்படுகிறேன். இந்த நிற வேற்றுமை ஒழிய வேண்டும்” என அவர் பதிவிட்டுள்ளார்.