மனிதாபிமானம் இல்லாத அமலாபால்.. இவ்வளவு மோசமானவரா? கசப்பான உண்மையை கூறிய பிரபலம்..!

Author: Vignesh
1 July 2024, 12:46 pm

நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இந்நிலையில், மேக்கப் கலைஞர்களில் பிரபலமான ஒருவர் ஹேமா இவர் பல முன்னணி நடிகைகளுக்கு மேக்கப் போட்டுள்ளார்.

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், அமலாபால் படப்பிடிப்பில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். அதாவது, ஒருமுறை நடிகை அமலாபாலின் படப்பிடிக்கு சென்றதாகவும், அப்போது ஏப்ரல் மற்றும் மே மாதம் என்பதால் கடுமையான வெயில் வாட்டியது. படப்பிடிப்பு நடந்த இடத்தில் நிழலோ மரமோ இல்லாததால் சிறிது நேரம் எங்கும் அமர முடியவில்லை என்பதால், அங்கிருந்த சில பெண்கள் தவிர் தவித்தனர்.

amala paul-updatenews360

மேலும் படிக்க: “பச்சக் பச்சக்” என நடிகைக்கு இச் கொடுத்த விஜய் தேவரகொண்டா.. அப்போ ராஷ்மிகாவை டீலில் விட்டாச்சா?..(video)

இதனால், அங்கே இருந்த கேரவேனுக்குள் சென்று அமர்ந்து கொண்டோம். ஆனால், நாங்கள் அமர்ந்திருந்த கொஞ்ச நேரத்திலே நடிகை அமலா பால் தனது மேனேஜரை அனுப்பி எங்களை வெளியேறும்படி எச்சரித்தார். இவ்வளவு கடுமையான வெயிலில் எங்கு போய் நிற்பது என்று யோசித்தோம். ஆனால், நாங்கள் இறங்கும் வரை அவர் எங்களை விடவில்லை. அதனால், கேரவேனை விட்டு வேறு வழியில்லாமல் இறங்கிவிட்டோம். அப்படத்தின், படப்பிடிப்பு முடியும் வரை இதுபோல் பல சங்கடங்கள் எங்களுக்கு நடந்தது.

மேலும் படிக்க: போயஸ் கார்டன் வாசியான நயன்தாரா.. புது வீட்டில் நடத்திய NIGHT போட்டோஷூட்..!!

நான் பல ஸ்டார் நடிகர், நடிகைகளுக்கு மேக்கப் போட்டு இருக்கிறேன். அவர்கள் அனைவரும் என்னிடம் மிகவும் கனிவாக நடந்து கொள்வார்கள். நடிகை தபு எங்களைப் போன்ற கலைஞர்களுக்காக வேனெல்லாம் கூட புக் செய்து நன்றாக பார்த்துக் கொண்டார். ஆனால், அமலாபால் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் எங்களிடம் நடந்து கொண்டார். படப்பிடிப்பில், மிக முக்கியமான நபர்கள் சிகை அலங்கார நிபுணர் மற்றும் மேக்கப் கலைஞர்கள் தான் கேமரா முன் நடிக்கும் நடிகர் நடிகைகளை அழகாக காட்டுவது அவர்கள் தான். இருந்தாலும், பல நேரங்களில் அவர்களுக்கு உரிய மரியாதையோ அங்கீகாரமும் கொடுப்பதில்லை என்பது வேதனையான விஷயம் என்று மேக்கப் கலைஞர் ஹேமா வருத்தத்துடன் பேசியுள்ளார்.

  • You don't deserve to be an actor.. The producer who ripped off Yogi Babu நீ நடிகனாக இருக்கவே லாயக்கி இல்ல.. யோகி பாபுவை மேடையில் விட்டு விளாசிய இயக்குநர்!