அர்ஜுன் கபூரின் 50 வயது காதலிக்கு என்ன ஆச்சு? பதற்றத்துடன் வீடியோவை ஷேர் செய்யும் நெட்டிசன்ஸ்!

Author: Shree
27 October 2023, 11:12 am
malaika
Quick Share

பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரெயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர்.

இதையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் அவர், அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். 50 வயதை நெருங்கிவிட்ட இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்கிற 20 வயது மகனும் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அர்பாஸ் கானை விவாகரத்து செய்து பிரிந்தார் மலைக்கா அரோரா.

அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பின்னர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்டார் மலைக்கா அரோரா. தற்போது அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அர்ஜுன் கபூரை விட மலைக்கா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நடிகர் அர்ஜுன் கபூர் -காதலி மலாய்க்காவை பிரேக்கப் செய்துவிட்டதாக செய்திகள் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால், இதெல்லாம் வெறும் வதந்தி என்பது பின்னர் இருவரும் மறைமுகமாக தெரிவித்தனர்.

malaika-arora-arjun-kapoor

இந்நிலையில் தற்போது மலாய்கா அரோராவின் தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு கருப்பான தழும்பு தெரிகிறது. இது அவர் வழுக்கி விழுந்த காயம் என்றும் அவர் விரைவில் குணமாகி உடல்நலம் தேறி வரவேண்டும் என்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நாங்க பிரேக்கப் பண்ணிட்டோமா யார் சொன்னது? என்ற பாணியில் இருவரும் மீண்டும் டேட்டிங் சென்ற வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. யார் என்ன சொன்னாலும் மலாய்க்காவுடன் வாழ்வது தான் வாழ்க்கை என ஒற்றை காலில் நிற்கிறாராம் அர்ஜுன் கபூர். எது எப்படியோ மலாய்க்காவிற்கு மஜா தான். இதோ அந்த லேட்டஸ்ட் வீடியோ!

Views: - 287

0

1