தங்கலான் லுக்கில் ஜோடியா மிரட்டும் விக்ரம் – மாளவிகா மோகன் – கவனத்தை ஈர்க்கும் போட்டோ!

Author: Shree
4 July 2023, 9:33 pm

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷ நடிகரான விக்ரம் பல வித்யாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை மிரள வைப்பார். அப்படிதான் தற்போது ஞானவேல்ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்தில் மிரட்டலான வேடத்தில் நடித்து வருகிறார்.

thangalaan

பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. தங்கலான் என்றால் ஊர் காவலன் என்று அர்த்தம். இரவு நேரங்களில் அந்த ஊரை சுற்றிவந்து அங்குள்ள மக்களின் பாதுகாவலனாக இருப்பதும், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக ஊர் தலைவருக்கு தகவலை சொல்வதே அவர்கள் வேலை.

தமிழ் பேசும் பறையர் இனங்களில் ‘தங்கலால பறையன்’ என்று ஒரு இனம் இருந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் இனத்தவர்களின் தலைவன், ஊர்க்காவலன், மக்கள் பாதுகாவலன், எல்லை வீரனாக இருப்பவர்களை தான் தங்கலான் என்று அழைத்துள்ளனர். இதில் விக்ரம் தங்கலானாக நடித்திருக்கிறார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் மாளவிகா மோகனன் தங்கலான் லுக்கில் விக்ரம் மற்றும் பா ரஞ்சித் உடன் எடுத்துக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு,

எதிர்பாராத நேரத்தில் நான் எதிர்பாராத வகையில் வந்த படம், இதுவரை இல்லாத வகையில் எனது உடல், மன மற்றும் உணர்ச்சி சகிப்புத்தன்மையை சோதித்த படம், திறமையான கலைஞர்கள் சிலருடன் ஒத்துழைக்கக் கிடைத்த படம் என கூறி பா ரஞ்சித் மற்றும் விக்ரமுக்கு நன்றி கூறியுள்ளார்.இரத்தம், வியர்வை மற்றும் கண்ணீர் கொண்ட ஒரு படமாக தங்கலான் உண்மையில் இருக்கும் என கூறி உள்ளார். இந்த போட்டோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!