கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

Author: Selvan
23 February 2025, 6:35 pm

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன்

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய நடிப்பில் பான் இந்திய அளவில் வெளிவந்த மார்கோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் மிரட்டான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியிருப்பார்.இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘கெட் செட் பேபி’ படம் வெளியானது,தான் நடித்த படத்தை பார்க்க பிரபல தியேட்டருக்கு சென்றார் உன்னி முகுந்த்,அப்போது இவரை பார்த்தவுடன் ரசிகர் ஒருவர் செய்த செயலால் மிகவும் கோபத்திற்கு ஆளானார்.

இதையும் படியுங்க: டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

அதவது இவர் நடந்து வரும் போது ரசிகர் ஒருவர் இவரை பின்தொடர்ந்து ஓடி வந்து உன்னிமுகுந்தின் முகத்துக்கு முன் போனை வைத்து வீடியோ எடுத்துட்டு வருவார்,இதனால் கடுப்பான அவர் போனை புடுங்கி தன்னுடைய பாக்கட்டில் போட்டு ரசிகரை முறைப்பார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி விவாத பொருளாக மாறியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!