“அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணா தான் சாப்பாடு”… 10 பிரபல நடிகர்களின் பிடியில் மலையாள சினிமா!

Author:
22 August 2024, 1:33 pm

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகையான பாவனா படப்பிடிப்பு தளத்தில் சூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தபோது நள்ளிரவில் காரில் கடத்தப்பட்டு மர்ம நபர்களால் பாலியல் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர வைத்தது. இதன் பின்னர் நடந்த விசாரணையில் மலையாள நடிகர் திலீப்பின் தூண்டுதலின் பெயரில் தான் இந்த பலாத்கார சம்பவம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை கிளப்பியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரள நடிகைகள் மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் ஒன்று கூடி தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து விசாரிக்க விசாரணை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது. இதை அடுத்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிட்டி அறிக்கையை நேற்று கேரளா அரசு வெளியிட்டிருந்தது.

அதில் பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை குறித்தும் நடிகர்களால் தாங்கள் படும் அவதிகளை குறித்தும் கூறி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 50 பேரின் வாக்குமூலத்தின் படி இந்த அறிக்கை தயாராகியுள்ளது. அதில் 15 ஆண் பிரபலங்களின் பிடியில் மலையாள சினிமா சிக்கிக் கொண்டிருக்கிறது என கூறப்படுகிறது.

மலையாள சினிமா அவர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளே தான் இறங்கி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் சொல்வதுதான் அங்கு செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு என கூறிவிட்டு நடிகைகளை அழைத்துக் கொண்டு தனி அறையில் தங்க வைத்துவிட்டு அவர்கள் பண்ணும் அட்டூழியங்கள் சொல்லில் அடங்காதவையாக உள்ளது நடிகைகள் கூறி இருக்கிறார்கள்.

இதனால் படப்பிடிப்புகளுக்கு சென்று இரவு தங்கி வேலை செய்வது என்பதே அச்சமடைய செய்கிறது. அது மட்டும் இல்லாமல் அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு சம்மதிக்கும் நடிகைகளுக்கு மட்டும் தான் படப்பிடிப்பு தளங்களில் உணவு வழங்கப்படும் என்றும் கூறுகிறார்கள். நிர்வாணமாக நடிக்கும் காட்சிகளுக்கு நடிகைகள் தொடர்ந்து உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

கதைக்கும் படத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் கூட அது போன்ற காட்சிகளில் நடிகைகளை நடிக்க சொல்லி தொந்தரவு செய்வதாக அந்த அறிக்கையில் பெயர் குறிப்பிடாத பல நடிகைகள் கூறி இருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களுக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட்க்கு உட்படுத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுப்பதால் அதன் அடிப்படையிலேயே இயக்குனர்கள் தயாரிப்பாளர் நடிகைகளிடம் இப்படி மோசமாக நடந்து கொள்வதாக வேறு வழியில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் எல்லாம் ஒவ்வொன்றாக வெளிவர சினிமா நடிகைகளின் இருண்ட பக்கம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!