சைலண்டா இருந்தே இயக்குநரை கரெக்ட் செய்த மாமன்னன் பட நடிகை.. விரைவில் திருமணம்!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2024, 12:03 pm

சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் அத்துறையில் உள்ளவர்களை திருமணம் செய்வது வாடிக்கைதான் என்றாலும் வாழ்க்கையில் நிலைத்து நின்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏனென்றால் கருத்து வேறுபாடு காரணமாக பல நட்சத்திர ஜோடிகள் பிரிவதுதான்.

தற்போது அந்த வகையில் நடிகை ஒருவர் இயக்குநரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

2012ஆம் ஆண்டு வெளியான சாட்டை படம் மூலம் டப்பிங் கலைஞராக அறிமுகமானவர் நடிகை ரவீனா ரவி.

இவரது தாய் ஸ்ரீஜா ரவி பிரபல டப்பிங் கலைஞர். சிம்ரன், ரம்பா , தேவயானி, லைலா, ஷாலினி, மாளவிகா உள்ளிட்ட பலருக்கு டப்பிங் பேசியுள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் ஏராளமான மலையாள படங்களுக்கும் டப்பிங் பேசியுள்ளார்.

இவரது மகளான ரவீனா ரவி, டப்பிங் கலைஞராக அறிமுகமான பின் எமி ஜாக்சன், அமலா பால், சமந்தா, காஜல் அகர்வால், ஸ்ரீ திவ்யா, கேத்தரின் தெரசா, மடோனா, ராஷி கண்ணா, திரிஷா, தீபிகா படுகோனேவுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

இதைத் தவிர சில படங்களிலும் நடித்துள்ளார். லவ் டுடே, ஒரு கிடாயின் கருணை மனு, வீரமே வாகை சூடும், மாமன்னன், வட்டார வழக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மாமன்னன் மற்றும் லவ் டுடே படத்தில் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. இவர் தற்போது திருமணம் தயாராகியுள்ளதாக கூறியுள்ளார்.

Ravena ravi lover

வாலாட்டி என்ற படத்தை இயக்கிய தேவன் ஜெயக்குமார் என்பவரை காதலித்து வரும் ரவீனா, தற்போது காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் மாலை கழுத்துமாக இருந்த போட்டோவை பார்த்து இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என பலர் நினைத்திருந்த நிலையில், தற்போது திருமண அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!