மமிதா பைஜுவுக்கு வந்த வாழ்வு! அப்படி என்னதான் வசியம் வச்சிருக்காரோ? வாயைபிளக்கும் ரசிகர்கள்!

Author: Prasad
19 May 2025, 12:55 pm

கியூட் நடிகை

2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் “சர்வோபரி பலக்காரன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மமிதா பைஜு. அதனை தொடர்ந்து “தாஹினி”, “வரதன்” போன்ற பல திரைப்படங்களில் நடித்த மமிதா பைஜு, “பிரேமலு” திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமானார். தமிழில் ஜிவி பிரகாஷின் “ரெபல்” திரைப்படத்தில் நடித்திருந்தார் மமிதா பைஜு. 

அதனை தொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து வரும் மமிதா பைஜு, அதனை தொடர்ந்து “இரண்டு வானம்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 

இந்த நிலையில்தான் பிரதீப் ரங்கநாதனின் “Dude” திரைப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. இவ்வாறு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகி வரும் மமிதா பைஜு தற்போது சூர்யா திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

சூர்யா 46

சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தனது 46 ஆவது திரைப்படத்தில் “லக்கி பாஸ்கர்” இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைக்கோர்க்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கான தொடக்க பூஜை இன்று நடைபெற்றது. இதில் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கும் மமிதா பைஜுவும் கலந்துகொண்டார். 

mamitha baiju acting in suriya 46 movie as heroine
mamitha baiju acting in suriya 46 movie as heroine

“சூர்யா 46” திரைப்படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆன நிலையில் மமிதா பைஜுவின் வளர்ச்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். 

  • vishal and sai dhanshika are going to marry நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப்போறோம்- பொது மேடையில் அறிவிக்கும் விஷால்?
  • Leave a Reply