பாலா அடித்ததால் வணங்கான் படத்திலிருந்து விலகினேன்?.. மமிதாபைஜு மீண்டும் விளக்கம்..!

Author: Vignesh
1 மார்ச் 2024, 9:27 காலை
mamitha baiju
Quick Share

வணங்கான் என்ற பெயரும் சூர்யா 41 படத்திற்கு வந்து கூடிய சீக்கிரம் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கதை போக்கு மாறிப்போனதால் சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலக்கிவிடப்பட்டதாக பாலா அறிக்கை வெளியிட்டார். இதற்கு காரணம் பாலா, சூர்யா இடையே கருத்து வேறுபாடும் சண்டையும் தான் காரணம் என்று கூறிப்படுகிறது. மேலும் அவரை கொடுமை படுத்தி டார்ச்சர் செய்து… அதிகம் பணம் பிடிங்கி செலவழித்து வந்துள்ளார்.

bala surya

ஒரு கட்டத்திற்கு மேல் படமே வேண்டாம் என கூறிவிட்டு சூர்யா விலகிக்கொண்டார். இது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து இப்படத்தில் அருண் விஜய் கமிட் ஆனார். அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சூர்யா எப்படி வணங்கான் படத்தில் இருந்து விலகினாரோ, அதே போல் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூவும் வணங்கான் படத்திலிருந்து விலகினார். படப்பிடிப்பில் இயக்குனர் பாலா நடிகை மமிதா பைஜூவை அடித்ததாகவும், ஒரு காட்சியில் மூன்று முறைமேல் நடித்தாராம் மமிதா பைஜூவை, அந்த காட்சி அவருக்கு சரியாக புரியவில்லை, ஆகையால் மூன்று டேக் ஆகியுள்ளது. அப்போது, இயக்குனர் பாலா நடிகை மமிதா பைஜூவின் தோள்பட்டையில் அடித்ததாக, இந்த தகவலை நடிகை மமிதா பைஜூ சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்நிலையில், நடிகை மமிதா பைஜூ சர்ச்சை பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், பாலாவுடன் ஒரு வருடமாக பயணித்திருக்கிறேன். அதுவும், அவரது டீம் நன்றாக தான் பார்த்துக் கொண்டார்கள். நான் பேட்டியில், சொன்ன ஒரு பகுதியை மட்டும் வெட்டி சர்ச்சையாகி இருக்கிறார்கள். பாலா சார் ஷூட்டிங்கில் ஸ்ட்ரிக்ட்தான் அது அவரது ஒர்க்கிங் ஸ்டைல் எனக் கூறி இருக்கிறார். மேலும், பாலாசார் என்னிடம் மிகவும் கடுமையாக எல்லாம் நடந்து கொள்ளவில்லை எனவும், அவர் தற்போது விளக்கம் கொடுத்து பதிவு ஒன்றை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Mamita
  • சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்து… தொடரும் சோகம் : நடந்தது என்ன?
  • Views: - 168

    0

    0