கப்பல்ல வேலை பார்ப்பவை திருமணம் செய்து கொண்ட நடிகை ஆத்மியா!

25 January 2021, 10:14 pm
Quick Share

சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை நடிகை ஆத்மியாவுக்கு இன்று கண்ணூரில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த மனம் கொத்திப் பறவை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஆத்மியா ராஜன். இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆத்மியா போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில், வேறு எந்தப் படங்களும் சரிவர அமையவில்லை. தற்போது, சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் வெள்ளை யானை படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, சரண்யா ரவி, எஸ்.எஸ்.ஸ்டான்லி, மூர்த்தி, ராமதாஸ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் சிவன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வெள்ளை யானை படம் தவிர அவியல் என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார். உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா லாக்டவுன் காலத்தில் கால் சென்டரில் வேலை பார்த்து மக்களுக்கு சேவையாற்றனார். இந்த நிலையில், ஆத்மியாவுக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சனூப் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். சனூப் (Marine Engineer) கப்பலில் பணியாற்றி வருகிறார். ஆத்மியா ராஜன் மற்றும் சனூப் திருமணம் இன்று கண்ணூரில் நடந்து முடிந்துள்ளது. ஆத்மியா – சனூப் திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறவரினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இன்று காலை 9.59 மணி முதல் 11.33 மணி வரையுள்ள சுபமுகூர்த்தத்தில் ஆத்மியா சனூப் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையடுத்து, 26 ஆம் தேதி பிரபல ஸ்டார் ஹோட்டலில் வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறதாம். திருமணத்திற்குப் பிறகும் கூட ஆத்மியா சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, அதற்கு சனூப் சம்மதமும் தெரிவித்துள்ளாராம்.

Views: - 12

0

0