‘உசேன் வீட்ல விசேஷம்’? CWC விலகல் குறித்த ரகசியத்தை உடைத்த மணிமேகலை..!

Author: Vignesh
1 April 2023, 7:00 pm

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

cook with comali - updatenews360

Cook With Comali நிகழ்ச்சியின் புரொமோவுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம், இதில் கோமாளிகளாக சிலர் நாம் ஏற்கெனவே பார்த்தவர்கள் உள்ளனர், இதில் புதிய கோமாளிகளும் உள்ளார்கள்.

otteri siva-updatenews360

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வருகிற ஜனவரி 28-ந் தேதி முதல் ஒளிபரப்பானது. கடந்த சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், குரேசி ஆகியோர் இந்த சீசனில் கலந்துகொண்டனர். புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா தாகா ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 4 சமீபத்தில் துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே, சமீபத்தில் இந்த ஷோவில் இருந்து கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

manimegalai

இந்நிலையில், அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மணிமேகலையிடம், ஏன் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறினீர்கள் என கேட்டதற்கு, அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மிஸ் செய்கிறேன் என்று மட்டும் தெரிவித்துள்ளார். ஆனால் மணிமேகலை வேறு எதுவும் தெரிவிக்க வில்லை.

இதற்கான காரணம் என்ன என்று கூட கூறாமல் நின்றது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இதனிடையே, தற்போது கணவருடன் சேர்ந்து சொந்த ஊரில் சில தொழில்களை ஆரம்பித்தும், இன்ஸ்டாகிராம் லைவ் சேட்டில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதில் ஒருவர், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளதற்கு மணிமேகலை, நோ, அதெல்லாம் வதந்தி என்றும், தான் கர்ப்பமாக இல்லை எனவும், எந்த செய்தியாக இருந்தாலும் 4 யூடியூப் சேனல்கள் சொல்லி தான் உங்களுக்கு தெரியுற மாதிரி இருக்காது எனவும், நானே சொல்லுவேன் என்று பதிலளித்தார்.

மேலும், தான் இன்னும் விஜய் டிவியில் தான் இருப்பதாகவும், ஏப்ரல் மாதத்தில் சிறப்பு பட்டிமன்றத்தில் தன்னை அடுத்து பார்க்கலாம் என்று மணிமேகலை தெரிவித்து உள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!