“தக் லைஃப்” வெளியான உடனே இது பண்ணனும்- மணிரத்னம் எடுத்த அதிரடி முடிவால் மிரண்டுபோன ரசிகர்கள்?
Author: Prasad30 May 2025, 1:49 pm
விரைவில் திரையரங்குகளில்….
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் திரிஷா, அபிராமி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை கமல்ஹாசன், மணிரத்னம், ரெட் ஜெயன்ட் மூவீஸ் உரிமையாளர்கள் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் இத்திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. இத்திரைப்படம் வெளியாக இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.
மணிரத்னம் எடுத்த அதிரடி முடிவு
இந்த நிலையில் மணிரத்னம் “தக் லைஃப்” திரைப்படத்தை அடுத்து விரைவில் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். அதாவது “தக் லைஃப்” திரைப்படம் வெளிவந்த பின்பு சில நாட்களிலேயே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளாராம் மணிரத்னம்.
இந்த புதிய திரைப்படத்தில் சிம்புவே கதாநாயகனாக நடிக்கிறாராம். சிம்புவுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கவுள்ளாராம். ருக்மிணி வசந்த் கன்னட மொழியில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் “ஏஸ்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சிவகார்த்திகேயனின் “மதராஸி” திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
மணிரத்னம் இயக்கவுள்ள புதிய திரைப்படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய ஒரு ரொமான்டிக் டிராமா என்று கூறப்படுகிறது. “அலைபாயுதே”, “ஓகே கண்மணி” ஆகியவற்றை தொடர்ந்து மணிரத்னம் இக்காதல் திரைப்படத்தை இயக்கவுள்ளதால் ரசிகர்கள் பலரும் மிகவும் ஆவலோடு இத்திரைப்படத்தின் அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.