என் வாழ்க்கை நாசமா போனதுக்கு காரணமே ரஜினி தான்: புலம்பித்தள்ளிய மனிஷா கொய்ராலா..!

Author: Vignesh
29 March 2023, 4:48 pm

தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. இவர் வடநாட்டு பாவ் பஜ்ஜி என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்த மாதிரி நடித்தார். தமிழில் இஸ்லாமிய பெண்ணாக ‘பாம்பாய்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி நடித்த இவருக்கு ரசிகர்களின் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

மேலும் இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசனுடன் நடித்த ‘இந்தியன்’ மற்றும் அர்ஜுனுடன் நடித்த முதல்வன், ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரிய வெற்றியடைந்தது.

மேலும், இவர் 90-களில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தார். இதன்பின் இந்தியில் கவனம் செலுத்தி வந்த மனிஷா திருமணம் செய்து கொண்டு சில காலம் வாய்ப்பில்லாமல் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

manisha koirala-updatenews360

இதற்கு இடையில் கேன்சரால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த மனிஷா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பாபா படம் என்னுடைய பெரிய பிளாப் படமாக இருப்பதோடு மிகப்பெரிய டிசாஸ்டர்.

Baba-updatenews360

என்னுடைய மொத்த கேரியரை தொலைக்க காரணம் பாபா படம் தான் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.தென்னிந்திய மொழிகளில் தனக்கு மார்க்கெட் சரிந்தது. இதனை வைத்து ரஜினிகாந்த்-ஐ பலர் கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!