Weight Loss செய்ய அறுவை சிகிச்சை? உருவகேலிக்கு பதிலடி கொடுத்த மஞ்சிமா மோகன்!

Author: Prasad
18 August 2025, 1:02 pm

குழந்தை நட்சத்திரம் to ஹீரோயின்?

குழந்தை நட்சத்திரமாக இருந்து அதன் பின் மிகப் பிரபலமான கதாநாயகியாக ஆனவர்தான் மஞ்சிமா மோகன். 1997 ஆம் ஆண்டு “கலியூஞ்சல்” என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் நுழைந்தார். அதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு “ஒரு வடக்கன் செல்ஃபி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் கௌதம் வாசுதேவ் மேனனின் “அச்சம் என்பது மடமையடா” திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமாக ஆனார். 

இவர் கௌதம் கார்த்திக்குடன் “தேவராட்டம்” திரைப்படத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படத்தின்போது இருவருக்குள்ளும் காதல் மலர 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். சமீப காலமாக இவரது உடல் எடையை குறித்த பேச்சுக்கள் அதிகம் காணப்பட்டன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு  பேட்டியில் கலந்துகொண்ட மஞ்சிமா மோகன் அவரது உடல் எடை அதிகரித்ததன் மீது வந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

Manjima mohan open talk about comments on her body weight 

மஞ்சிமாவின் பதிலடி!

“எனக்கு பிசிஓடி பிரச்சனை இருக்கிறது. இதன் காரணமாகத்தான் எடை கூடியது. பிசிஓடியை குறைக்க வேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைக்க வேண்டி இருந்தது. அறுவை சிகிச்சை மூலம் எடையை குறைக்க பல மருத்துவர்களை அணுகினேன்” என அப்பேட்டியில் பேசிய அவர், 

“உடல் எடைதான் மிகவும் பெரிய பிரச்சனை என்பது போல் பேசுகிறார்கள். ஆனால் ஆரோக்கியத்தை பற்றி பேசமாட்டார்கள். எடையை குறைத்திருந்தால் எனக்கு இன்னும் சில படங்களில் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். அதன் பின் வேறு யாரும் நம்மை எப்படி இருக்கிறோம் என விசாரிக்க மாட்டார்கள். சினிமா சம்பந்தமில்லாத வேறு சில இலக்குகளும் எனக்கு உள்ளது” எனவும் அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!