“40 வயசுன்னு சொன்னா எவனும் நம்ப மாட்டான்” – ரெட் ஒயின் போல வயது கூட கூட அழகும் கூட்டிட்டே போகும் மஞ்சு வாரியர்

3 March 2021, 4:54 pm
Quick Share

மலையாள சினிமாவில் கதைகள் தான் பெரும்பாலும் நாயகர்களாக இருக்கும். அந்த கதைக்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்க வைப்பார்கள். அது சின்ன ஹீரோ பெரிய ஹீரோ என்ற பாகுபாடு ஒரு சிலரைத் தவிர மற்ற யாரும் பார்ப்பதில்லை. அதனால்தான் அங்கு சிறு படங்களும் வெற்றி அடைகின்றன. அப்படிப்பட்ட மலையாள தேசத்தின் ஒரு நடிகை சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால் அது மஞ்சு வாரியர் தான்.

பல வெற்றிப்படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தபோது நடிகர் திலீபை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஒத்துப் போகாமல் இருக்கவே பிரிந்துவிட்டனர். அதன்பின் கம்பக் கொடுத்து How old are you படத்தின் மூலம் மீண்டும் பல வெற்றிப் படங்களைத் தந்தார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் நாயகியாக நடித்து வரும் இவர் பல முன்னணி நடிகருடன் நடித்துள்ளார்.

அசுரன் படத்தின் மூலம் இவரை தமிழ் சினிமாவிற்கு கூட்டிக் கொண்டு வந்தனர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து மக்களிடம் பெரும் பாராட்டை பெற்றார். கம்பேக் குயின் இன்று கேரள மக்களால் அழைக்கப்படும் மஞ்சுவாரியார், அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

இவரை பார்த்தால் 42 வயதாகிறது என்று யாரும் சொல்ல முடியாத அளவுக்கு பேரழகாக இருக்கிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இவரை இன்னும் இளமையாக காட்டுகிறது. இவரை பார்த்து நிறைய நடிகைகள் பொறாமைப்படும் அளவு இளமை ததும்ப இருந்து வருகிறார். இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வயது ஏற ஏற அழகாய் கொண்டே வருகிறார் என்று இவருக்கு “ரெட் ஒயின்” என செல்லப் பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்.

Views: - 2210

10

1