வந்தான்.. கிஸ் அடிச்சான்.. ரிப்ட்டு.. முடியல தலைவரே.. சிம்பு வெளியிட்ட மன்மத லீலை Glimpse..!

Author: Rajesh
10 February 2022, 7:22 pm
Quick Share

சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்ட, மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து மன்மதலீலை படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில், அசோக்செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த மணிவண்ணன், இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.

முருங்கைக்காயை வைத்து, தமிழ்திரைப்பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் தான் இயக்குனர் கே.பாக்யராஜ். அந்த வகையில், குண்டான பெண்ணை திருமணம் செய்து, தன் ஆசைகளை அடக்க முடியாத ரோலில் நடிகர் கே.பாக்யராஜ் நடித்து அசத்திய படம் தான் ‘சின்னவீடு’ இந்தப்படம் அப்போது பெருமளவு மக்களால் பேசப்பட்டது.

இதனிடையே, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மன்மதலீலை திரைப்படமும், ஒரு இளைஞனின் வாழ்க்கையில் திருமண வாழ்விற்கு முன் நடந்த சம்பவங்களும், திருமணத்திற்கு பிறகு நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என வெங்கட் பிரபு கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது, இந்த படத்தின் Glimpse வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிம்பு தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Views: - 565

5

0