ஓயாத மன்சூர் அலிகான் விவகாரம்.. காவல்துறையிடம் இருந்து திரிஷாவுக்கு பறந்துபோன முக்கிய கடிதம்..!

Author: Vignesh
1 December 2023, 2:30 pm

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, அவரது பேச்சுக்கு நடிகை த்ரிஷா உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது. அதன்பேரில் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

mansoor ali khan

இதையடுத்து, அதன் பின் மன்சூர் அலிகான் திரிஷா விட மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்கு திரிஷா தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பதே புனிதம் என்று பதில் அளித்து இருந்தார். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் குறித்து த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று நடிகை திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?