மன்சூர் அலிகான் இயக்கும் முழு நீள சமஸ்கிருத திரைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்?
Author: Prasad8 July 2025, 4:29 pm
முழுக்க முழுக்க சமஸ்கிருத மொழியில் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்கப்போவதாக கூறியுள்ளார் மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகானின் புதிய ஆல்பம்
மன்சூர் அலிகான் “அஹம் பிரம்மாஸ்மி” என்ற பெயரில் மியூக் ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனை மன்சூர் அலிகானே இசையமைத்து பாடல் எழுதி பாடியும் உள்ளார். இந்த ஆல்பத்தில் சமஸ்கிருத மொழியில் சில சுலோகங்களை பயன்படுத்தியுள்ளார். இந்த ஆல்பத்தின் டிரெயிலர் தற்போது வெளிவந்துள்ளது. இதில் மன்சூர் அலிகான் பரதநாட்டியமும் ஆடியுள்ளார்! இந்த நிலையில் இந்த ஆல்பம் குறித்து மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர்களிடம் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

முழு நீள சமஸ்கிருத திரைப்படம்
“தமிழ் என்னுடைய தாய் மொழி, தொன்மையான மொழி. ஆனால் கலைஞனுக்கு மொழி, இனம், நாடு என்ற வித்தியாசம் கிடையாது. பரதநாட்டியம், குச்சுப்புடி, சிவதாண்டவம் ஆகியவற்றை ஆடுவதற்கு சமஸ்கிருதம் பொருத்தமாக இருந்தது. ஆதலால் அஹம் பிரம்மாஸ்மி ஆல்பத்தில் சமஸ்கிருத மொழியை பயன்படுத்தியுள்ளேன். ஆல்பத்தின் டிரெயிலர் தற்போது வெளிவந்துள்ளது. முழு ஆல்பம் விரைவில் வெளிவரும்” என தெரிவித்துள்ள மன்சூர் அலிகான்,
“முன்னணி நடிகர்களை வைத்து முழுக்க முழுக்க சமஸ்கிருதத்திலேயே ஒரு திரைப்படத்தை விரைவில் இயக்கவுள்ளேன். அத்திரைப்படம் பேன் இந்திய படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளின் சப் டைட்டிலோடு வெளிவரும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.