விஜய் ஆவது *** ஆவது… ரூ.1 கோடி கொடுத்தா யாருக்காக வேணாலும் ஓட்டு கேட்பேன் – மன்சூர் அலிகான் மாஸ் Speech!
Author: Shree18 ஆகஸ்ட் 2023, 8:05 மணி
தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாகவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது.
இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்து வருகிறார்.
அண்மையில் நான் ரெடி தான் வரவா பாடலில் கூட மன்சூர் அலிகான் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் யாருக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என கேட்டதற்கு? ரூ. 1 லட்சம் கோடி கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு கேட்பேன். நீ ஒரு அரசியல் பண்றன்னா நான் ஒரு அரசியல் பண்ணுவேன் அவ்ளோவ் தான் என தன் பாணியில் பதிலளித்துள்ளார்.
0
0