மணிரத்னம் இதை மட்டும் பண்ணிருந்தார்னா?- பாட்டு பாடி ரிவ்யூ வீடியோ வெளியிட்ட மன்சூர் அலிகான்

Author: Prasad
13 June 2025, 4:36 pm

தோல்வி திரைப்படம்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான “தக் லைஃப்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியானது. ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. 

படத்தின் திரைக்கதை மிகவும் சுமாராக இருப்பதாகவும் கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை எனவும்  ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற எந்த காட்சிகளும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை எனவும் கூறினர். இவ்வாறு மிகவும் மோசமான விமர்சனங்களையே இத்திரைப்படம் எதிர்கொண்டுள்ளது. 

mansoor ali khan review on thug life movie viral video

மன்சூர் அலிகானின் ரிவ்யூ

இந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தை குறித்து மன்சூர் அலிகான் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், “தம்பி ஏ ஆர் ரஹ்மான் பாடல்களில் ஒரு இறையருள் இருக்கும். எல்லா புகழும் இறைவனுக்கே என்ற அல்லா பாடலுக்கும் எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடலுக்கும் தொடர்பு இருக்கிறது. 

இப்போது வெளிவந்த படத்திலும் கூட முத்தமழை பாடல் இடம்பெற்றிருந்தால் நிச்சயம் அப்படம் வெற்றியடைந்திருக்கும். அந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. வேலை பளூ காரணமாகவும் குடும்ப சூழல் காரணமாகவும் அலைந்துகொண்டிருப்பதால் என்னால் பார்க்க முடியவில்லை. 

அவர் அதீதமான பக்திமானாக இருப்பதினால் அவர் எந்த பாடலை கம்போஸ் செய்தாலும் அதில் இறையருள் இருக்கும். முத்த மழை பாடல் படத்தில் இடம்பெற்றிருந்தால் நிச்சயமாக வரவேற்பு பெற்றிருக்கும். என்ன காரணத்தினாலேயோ மணிரத்னம் படத்தில் அது இடம்பெறவில்லை” என பேசியுள்ளார். 

அந்த வீடியோவின் இடையே “முத்த மழை” பாடலையும் இஸ்லாமிய பாடல் ஒன்றையும் பாடி அந்த இரு பாடல்களையும்  ஒப்பிட்டு பேசியுள்ளார் மன்சூர் அலிகான். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.   

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!