ரவி மோகன் மாதிரி ஆயிடாத- பொது மேடையில் வாய்விட்டு சர்ச்சையை கிளப்பிய மன்சூர் அலிகான்…

Author: Prasad
24 May 2025, 3:16 pm

ரவி மோகன்-ஆர்த்தி பிரிவு

ரவி மோகன்-ஆர்த்தி ஜோடி தங்களது விவாகரத்தை அறிவித்ததில் இருந்து ஊடகங்களில் எங்கு திரும்பினாலும் இவர்களின் விவகாரத்து குறித்த செய்திகளே நிறைந்து கிடக்கின்றன. அதுமட்டுமல்லாது ரவி மோகன்-கெனீஷா ஆகியோர் ஜோடியாக ஐசரி கணேஷ் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆன பின்பு ஆர்த்தி மிகவும் மனம் நொந்தபடி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

mansoor ali khan trolled ravi mohan divorce in public

அதன் பின் ரவி மோகன் ஆர்த்தி மீதும் அவரது தாயார் சுஜாதா விஜயகுமார் மீதும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கியவாறு நான்கு பக்கங்களுக்கு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து ரவி மோகனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்த்தி மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இவர்களின் விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் மீது அவதூறு கிளப்பும் வகையில் அறிக்கைகள் வெளியிட கூடாது என நீதிமன்றம் தடை விதித்தது. 

ரவி மோகன் மாதிரி ஆகிடாத

பிரபு, வெற்றி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரது நடிப்பில் மகா கந்தன் என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ராஜபுத்திரன்”. இத்திரைப்படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

mansoor ali khan trolled ravi mohan divorce in public

அதில் பேசிய மன்சூர் அலிகான் அப்படக்குழுவினரில் ஒரு இளைஞரை பார்த்து, “பையன் நன்றாக சிகப்பாக அழகாகத்தான் இருக்கிறான். நம்ம ஜெயம் ரவி மாதிரி யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு மாட்டிகாத” என கூறினார். அவர் அவ்வாறு பேசியதும் அரங்கில் உள்ள பலரும் சிரித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!