போரே முடியல, அதுக்குள்ள இப்படியா? ஆபரேஷன் சிந்தூரை திரைப்படமாக எடுக்க முந்தியடிக்கும் தயாரிப்பாளர்கள்!
Author: Prasad9 May 2025, 11:37 am
ஆபரேஷன் சிந்தூர்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது இந்திய இராணுவம். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில் ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் போன்ற எல்லை மாநிலங்களில் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. பாகிஸ்தானின் டிரோன்கள் பலவற்றை இந்திய இராணுவம் முறியடித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

முந்தியடிக்கும் தயாரிப்பாளர்கள்
இவ்வாறு போர் சூழலில் நாடு பதற்ற நிலையில் இருக்கும் சமயத்தில் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் திரைப்படம் எடுக்க 15க்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் புரொட்யூசர் அசோஷியேஷனில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. “ஆபரேசன் சிந்தூர்” என்ற டைட்டிலை கைப்பற்ற ஜீ ஸ்டூடியோஸ், டி சீரிஸ் போன்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் இந்த போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று ரிலையன்ஸ் நிறுவனம் “ஆப்ரேஷன் சிந்தூர்” வர்த்தக முத்திரையாக பதிவு செய்ய விண்ணப்பம் அளித்திருந்தது. இதற்கு எதிர்ப்புகள் பலமாக இருந்த நிலையில் இந்த முடிவை திரும்பப் பெறுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.