காக்கா குஞ்சி மாதிரி பொறந்தேனு கொல்ல பார்த்தாங்க – அம்மாவை குறித்து மாரி செல்வராஜ்!

Author:
29 August 2024, 10:34 am

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் வாழ்க்கையின் வலிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தும் தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாளியான மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது வெளிவந்து தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் “வாழை”.

இந்த திரைப்படம் மாரி செல்வராஜ் தனது சிறு வயது வாழ்க்கையை மையப்படுத்தி…வலிகளையும் வேதனைகளையும் உள்ளடக்கி எடுத்து இருக்கிறார். இந்த திரைப்படத்தை பார்த்த எல்லோருமே கண் கலங்கி மன வேதனைடன் வெளியில் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

திரையரங்கில் இருந்து வெளியில் வரும் எல்லோருமே கனத்த இதயத்தோடு வந்து பேட்டி கொடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில் முன்னதாக இப்படத்தை பார்த்த இயக்குனர் பாலா தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் கலங்கி அழுது மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.தொடர்ந்து பல திரைபிரபலங்கள் வாழை படத்திற்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் மாரி செல்வராஜ் நான் என் குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையாக பிறந்தேன். அப்போது கன்னங்கரேல்னு காக்கா குஞ்சு மாதிரி கருப்பாக இருப்பேன். அந்த சமயத்தில் எல்லோரும் என் அம்மாவிடம் இந்த குழந்தை கொன்றுவிடு ஐந்தாவது பிள்ளை குடும்பத்தை பஞ்சா பறக்கடிச்சிடுவான் அப்படின்னு சொல்லி எல்லாரும் நெல் மணியை போட்டு கொன்னுட சொல்லியிருக்காங்க.

ஆனால், எங்க அம்மா சொன்ன ஒரு வார்த்தை தான் எனக்கு அடிக்கடி ஞாபகத்துக்கு வரும். அதாவது மத்த பிள்ளைகளை என்னுடைய பிள்ளையா பெத்தேன். ஆனால் இவனை மட்டும் தான் என் புருஷனையே பிள்ளையா பெத்திருக்கேன் அப்படின்னு எங்க அம்மா சொன்னாங்களாம். நான் நிறைய வாழ்க்கையில அவங்களுக்கு கஷ்டத்தை கொடுத்திருக்கேன்.

அவங்கள சஞ்சல படுத்திருக்கேன். கண்ணீர் வர வச்சிருக்கேன் அவன் என்ன பண்ண போறான்? வாழ்க்கையில் எப்படி இருக்க போறான்? எப்படி பொழைக்க போறான் என எங்க அம்மாவுக்கு என்ன பத்தின கவலை நிறைய இருந்துச்சு. உண்மையிலேயே நான் அவங்க சொன்ன மாதிரி நிறைய கஷ்டப்படுத்தி இருக்கேன். ஆனால். என்னை பெருசா நம்பினாங்க. இப்பதான் அதிலிருந்து கொஞ்சம் அவங்க மீண்டு வந்திருக்காங்க என மாரி செல்வராஜ் மிகவும் உருக்கமாக பேசி இருந்தார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!