சூர்யாவுடன் இணையும் மாரி செல்வராஜ்?

11 April 2021, 9:54 pm
Quick Share

தனுஷைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலமாக தன்னை ஒரு சிறந்த இயக்குநராக காட்டியவர் இயக்குநர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படமும் ஜாதியை மையப்படுத்திய படம். இதே பாணியில், தனுஷின் கர்ணன் படத்தை கொடுத்துள்ளார். கீழ் சமூகத்தினரைச் சேர்ந்த மக்கள் மேல் சமூகத்தினராலும், அரசாங்க அதிகாரிகளாலும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களால் பாதிக்கப்படும் நம்ம ஹீரோ, தன் மக்களையும், தன் இனத்தின் உரிமைக்காகவும் போராடும் கதையை மையப்படுத்தி வெளியான படம் கர்ணன்.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற கர்ணன், வசூல் ரீதியாகவும் வரவேற்பு குவித்து வருகிறது. இந்தப் பட த்தைத் தொடர்ந்து மீண்டும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் புதிய படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பட த்தில் தான் சூர்யா ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2022 ஆம் ஆண்டு பிற்பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா40 படத்தில் நடித்து வருகிறார்.

வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா படத்திலும் நடித்து வருகிறார். விரைவில், மாரி செல்வராஜ் கூட்டணியிலும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதே போன்று மாரி செல்வராஜ், விளையாட்டு கதையை மையப்படுத்தி உருவாகும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் பா ரஞ்சித் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படம் முடிந்த பிறகு சூர்யா படம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 82

1

1