மனசு ரொம்ப வலிக்குது.. பணத்துக்காக என்ன வேணா பேசுவீங்களா? மாரிமுத்துவின் தம்பி இமோஷனல்..!

Author: Vignesh
26 September 2023, 11:30 am

பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார். இதனிடையே நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) ‘எதிர்நீச்சல்’ தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

அடுத்ததாக கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 8ம் தேதி காலை சீரியல் ஒன்றிற்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். இவரது மரணம் யாராலும் ஏறுகொளவே முடியவில்லை.

அவருடன் நடித்த நடிகர் நடிகைகள் அந்த கவலையில் இருந்து இன்னும் மீண்டு வரவே இல்லை. மாரிமுத்துவின் மரணத்திற்கு பின் ஆதி குணசேகரன் கேரக்டரை யாராலும் நிரப்பவே முடியாது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், மாரிமுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சி தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்களிடையே வாக்குவாதம் செய்து இருந்தார். இது குறித்து பேசிய பயில்வான், மாரிமுத்து ஜோசியம் உண்மை இல்லை, சாமியே இல்லை என்று சொன்னதால் தான் இறந்து விட்டார் என்று பேசி இருந்தார்.

இதனால் மாரிமுத்துவின் தம்பி, “தனது அண்ணன் சாமியை எதிர்த்து பேசியதால்தான், சாமி அவரை கொன்றுவிட்டது என்று பயில்வான் தெரிவித்து உள்ளார். அப்படி எல்லாம் பேசாதீங்க மனசு வலிக்கிறது என்றும், தானும் சாமி இல்லை என்றுதான் சொல்கிறேன் சாமி, என்னைக் கொல்லட்டும் அப்போது பயில்வான் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன்.
ஆனால், இறந்தவர் பற்றி பேசுவது ஒரு நல்ல கலைஞனுக்கு அழகு இல்லை என்றும், தன்னுடைய வருமானத்திற்காக பயில்வான் ரங்கநாதன் பேசியது மிகப்பெரிய தவறு எனவும், அவருக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!