காசுக்காக அப்பா பத்தி தப்பா பேசாதே… நேருக்கு நேர் மோத தயார் – சவால்விட்ட மகன்!
Author: Shree25 September 2023, 2:09 pm
பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார். இதனிடையே நடிகர் மாரிமுத்து சீரியல் ஒன்றிற்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துவிட்டார். அவரின் இந்த திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது.
அவரது ரசிகர்களால் இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்நிலையில் அவரது மரணத்திற்கு காரணம் அவர் சாமியை நம்பாததும், ஜோஷியர்களை எதிர்த்து பேசியதும் தான் என பலர் கட்டுக்கதைகள் காட்டுகிறார்கள். அப்படித்தான் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன்,
மறைந்த நடிகர் மாரிமுத்து அவர்கள், தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்களை பற்றியும் ஜோதிடத்தை பற்றியும் விமர்சனம் செய்து பேசியதால் தான் அவருக்கு திடீர் மரணம் ஏற்பட்டு விட்டது என்று கூறி விமர்சித்தார். இதுகுறித்து மாரிமுத்துவின் தம்பி, இதுபோன்ற விமர்சனங்கள் மிகுந்த மனவேதனை கொடுக்கிறது.
அண்ணன் மட்டுமல்ல நானும் தான் சொல்கிறேன் சாமி இல்லை என்று அப்போ என்னையும் கொல்லட்டும் பார்ப்போம். ஒரு கலைஞனை கலைஞனனே இப்படி எல்லாம் பேசலாமா? உயிரோடு இருக்கும்போது அவர்கிட்ட மோதிப் பாருங்க. அதைவிட்டுவிட்டு அவர் இறந்த பிறகு அது அந்த சாமியாரை பற்றி பேசுனதுனால தான் அந்த சாமி வந்து கொன்னுடுச்சுன்னு சொன்னா அது எவ்வளவு கேவலம் என மாரிமுத்துவின் தம்பி பேசியிருந்தார்.
மேலும், இதுகுறித்து மாரிமுத்துவின் மகன் பேசியுள்ளதாவது, ” என்னுடைய அப்பா சாமி இல்லை என்று சொன்னதால்தான் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி என்றால் அது போன்ற விவாதத்தில் பேச நானும் தயாராக இருக்கிறேன். தயவு செய்து இறந்த ஒருவரை பற்றி இதுபோன்று பேசுவது ரொம்பவே தவறு. காசுக்காக அவரைப் பற்றி பேசுவதால் அவருடைய ஆத்மா வேதனைக்கொள்ளும். தயவுசெய்து இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என கட்டமாக பேசியுள்ளார்.